ஸ்ரீதேவி
இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். இவருடைய இறப்பு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்து. இந்தியளவில் ஜொலித்த நடிகை ஸ்ரீதேவி, படக்குழுவினரை மிகவும் சிரமப்படுத்தும் நடிகை என்று, சில நடிகர் நடிகைகளிடம் மிகவும் திமிராகவும் நடந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாக்கிங் தகவல்
குறிப்பாக நடிகை ஜெயப்ரதாவிடம் ஸ்ரீதேவி நடந்துகொண்ட விதம் குறித்து ஷாக்கிங் தகவல் கூறப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நடிகை ஜெயப்பிரதா, ஸ்ரீதேவியை மிகவும் திமிர் பிடித்த நடிகை என்றும் கூறியுள்ளாராம்.
படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே ஸ்ரீதேவி ஜெயப்ரதாவிடம் நன்றாக பேசுவாராம். மிகவும் நெருக்கமான தோழியை போல் பலகுவாராம். ஆனால், அதன்பின் வேறு சினிமா விழாக்களில் சந்திக்க சந்தர்ப்பம் வந்தால் கூட ஜெயப்ரதாவிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டாராம் ஸ்ரீதேவி.
ஜெயப்பிரதா ஒரு இடத்தில அமர்ந்து இருந்தார், ஸ்ரீதேவி அவரிடம் இருந்து தூரமாக சென்று தான் அமருவாராம்.
இப்படி பலரிடமும் ஸ்ரீதேவி நடந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. எந்த படங்களில் ஒன்றாக சேர்ந்த நடித்திருந்தாலும் கூட, ஒவ்வொரு படத்திற்கும், அந்தந்த இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் வந்து, இவர் தான் ஜெயப்பிரதா என ஸ்ரீதேவியிடம் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டியது இருந்ததாம்.
ஆனால், ஸ்ரீதேவிஅவரை பார்த்ததும் உடனே பேசிவிட மாட்டாராம். இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் ஜெயப்பிரதா கூறியுள்ளார் என தகவல் உலாவி வருகிறது.