மருத்துவமனையில் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.
இன்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமாக ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் இதுதானா
திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பே இதற்காக மருத்துவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை செய்து, அதன்பின்தான் பரிசோதனைக்கு முடிவு செய்துள்ளார்களாம்.
ரஜினிகாந்தின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்கின்றனர். இதனால்தான் அக்டோபர் 1ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளவே, ஒரு நாள் முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
ஸ்டாலின் பதிவு
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என கூறி பதிவு செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024