எதிர்நீச்சல்
சின்னத்திரையில் ப்ளாக் பஸ்டர் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
விரைவில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், முதல் பாகத்தை போலவே எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக மதுமிதா தான் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நான் ஹீரோயினாக நடிக்கவில்லை வேறொரு புதிய அத்தியாயம் துவங்குகிறது என நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர். எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்தில் மதுமிதா நடிக்காதது, அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
திருமணமா?
இந்த நிலையில், புதிய அத்தியாயம் என நடிகை மதுமிதா குறிப்பிட்டுள்ளது அவருடைய திருமணத்தை பற்றியா? விரைவில் அவருக்கு திருமணம் நடக்கபோகிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், திருமணம் குறித்து நடிகை மதுமிதா எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.
அவர் புதிய அத்தியாயம் என குறிப்பிட்டுள்ளது, வேறொரு புதிய சீரியல் அல்லது திரைப்படமாக கூட இருக்கலாம் என்றும் மற்றொரு பக்கம் கூறப்படுகிறது. விரைவில் புதிய அத்தியாயம் குறித்து மதுமிதாவிடம் இருந்தே தெளிவான விளக்கம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.