தளபதி 69
நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் அவர் சினிமாவில் இருந்து விலகியுள்ளார்.
தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் குறித்து அப்டேட் தொடர்ந்து வெளிவந்தது.
பட பூஜை
பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர். இந்த நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்று முடிந்துள்ளது.
தளபதி 69 பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட மற்ற டெக்னீஷன்களும் கலந்துகொண்டுள்ளனர். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..