கங்குவா
கங்குவா, நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம்.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் பட நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3D முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இசை வெளியீடு
வேட்டையன் படத்துடன் ரிலீஸ் ஆக வேண்டிய படம் ஆனால் ரஜினி ரசிகனாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யோசித்து கங்குவா பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாத இறுதி வாரத்தில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு சூர்யா மற்றும் திஷா பதானி இடம்பெறும் கங்குவா படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகவும் உள்ளதாம்.