அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார்.
இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது.
ஷாக்கிங் வீடியோ
இதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார் அஜித்.
இந்த நிலையில் விமானநிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இதில் அஜித் சிரமப்பட்டு நடந்து செல்கிறார். இதை கவனித்த ரசிகர்கள் பலரும், அவருடைய காலில் அடிபட்டுள்ளதா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
#AK Sir Enroute To Azerbaijan For Final Schedule Of #Vidaamuyarchi 👍
VC – @ajithFCpic.twitter.com/G7QgxOTht2— Rajasekar Russalayan (@iamrajesh_pov) June 19, 2024