பூஜா ஹெக்டே
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த படம் பீஸ்ட். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக வெற்றி என கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தளபதி 69. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை கடந்த 4ஆம் தேதி போடப்பட்ட நிலையில், நேற்று பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தளபதி 69ல் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் டாப் குக் டூப் குக், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பிய மோனிஷாவும் இப்படத்தில் நடிக்கிறார்.
சம்பளம்
இந்த நிலையில், தளபதி 69ல் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு இப்படத்திற்காக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பூஜா ஹெக்டே தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூர்யா 44. இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ள நிலையில், தளபதி 69 படத்திற்காக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.