பிக் பாஸ் 8வது சீசன் இன்று தொடங்கி இருக்கிறது. கமல் வெளியேறிவிட்ட நிலையில் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக வந்திருக்கிறார். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வந்திருக்கிறார்.
‘நீ யாரை கேட்டு வந்த..?’ என விஜய் சேதுபதி எடுத்தவுடன் ஒரு கேள்வியை கேட்டார். அதன் பின் அவரை பற்றிய சில விஷயங்களையும் மேடையில் பேசினார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என சில விஷயங்களை கூறினார்.
வயது
சாச்சனா தான் பார்க்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு நிஜத்தில் 21 வயது ஆகிறது என கூறி இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் சாச்சனாவுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி, ‘உனக்கு எப்படி தோன்றுதொ அப்படி கூப்பிடு. அப்பா என்று கூப்பிடு, இல்லை சார் என்று கூட கூப்பிடு. ஆனால் ஷோவில் எதாவது செய்துவிட்டு வார இறுதியில் வந்து அப்பா என சொல்லி என்னை ஏமாத்திடாத’ என கூறினார்.