பிக்பாஸ் 18
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு நிகழ்ச்சி.
நேற்று (அக்டோபர் 6) படு பிரம்மாண்டமாக நிகழ்ச்சி தொடங்கியுள்ளது, இதுநாள் வரை இவர்கள் தான் போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் சுற்றிய விவரங்களில் உள்ள பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பிக்பாஸ் 8 சீசனில் நிறைய விஜய் டிவி பிரபலங்கள் உள்ள நிலையில் முழு சீசனை காணவும் ரசிகர்களும் ரெடியாகிவிட்டனர்.
பிக்பாஸ் 18
தமிழில் இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகிறது, ஆனால் ஹிந்தியில் தற்போது 18வது சீசன் தொடங்கியுள்ளது. வழக்கம் போ இந்த சீசனை சல்மான் கான் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிக்பாஸ் 18வது சீசனில் நாம் மிகவும் பார்த்து பழக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம் ஒருவர் கலந்துகொண்டிருக்கிறார்.
அவர் வேறுயாரும் இல்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு சீசனை வென்ற ஸ்ருதிகா தான் ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.