சிங்கம் அகைன்
பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று சிங்கம் அகைன்.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், அர்ஜுன் கபூர், தீபிகா படுகோன், அக்ஷய் குமார் என பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
சூர்யவன்ஷி, சிம்பா ஆகிய படங்களில் இருந்தும் சிங்கம் அகைன் படத்தில் கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். இதனால் கண்டிப்பாக இப்படம் மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இன்று சிங்கம் அகைன் படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.
ட்ரைலர்
ஒரு ட்ரைலர் என்றால் 2 நிமிடம் அல்லது 3 நிமிடம் ஓடும். ஆனால், இந்த சிங்கம் அகைன் படத்தின் ட்ரைலர் 4.58 கிட்டத்தட்ட 5 நிமிடங்கள்.
இதனால் இது படத்தின் ட்ரைலரா அல்லது படமா, முழு படத்தையும் ட்ரைலரில் சொல்லிவிட்டார்களே என நெட்டிசன்கள் ட்ரைலரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.