பிக் பாஸ் 8 முதல் எலிமினேஷன்
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், நேற்று முதல் நாளே முதல் எலிமினேஷன் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சாச்சனா பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய எவிக்ஷன் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல் எலிமினேஷன் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை கேப்டன் யார் என்று தேர்ந்தெடுக்க கடும் போட்டி நடைபெற்றது.
உடல்நல குறைவால் அவதிப்படும் போட்டியாளர்
ஆண்கள் vs பெண்கள் என நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கடும்போட்டியில் ஈடுபட்ட போட்டியாளர்களுக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதில் ரவிந்தருக்கு கால்களில் வலி ஏற்பட்டு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்கான மருத்துவ சிகிச்சையும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவரை கவனித்துக்கொள்கிறார்கள்.
உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து ரவீந்தர் வெளியேறுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று.
இதோ அந்த வீடியோ..
Fatman Health Issue…
Viraivil apo next Eviction Irukalam.#BiggBossTamil
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 8, 2024