சம்பளம்
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போல் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
அதன்படி, தற்போதைய தலைவலின்படி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோன் இருக்கிறார் என கூறப்படுகிறது. ஆலியா பட், கங்கனா ரணாவத், கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட தீபிகா தான் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
தீபிகா படுகோன்
நடிகை தீபிகா படுகோன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இதை தொடர்ந்து கங்கனா ரூ. 15 கோடி முதல் ரூ. 27 கோடி, ரூ. பிரியங்கா சோப்ரா ரூ. 15 கோடி முதல் ரூ. 25 கோடி, கத்ரினா கைப் ரூ. 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் ரூ. 10 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்களாம்.
இந்த தகவலை பிரபல போர்பஸ் நிறுவனம் ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளதாம். மேலும் இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த நடிகையின் பெயரும் இடம்பெறவில்லையாம்.