Thursday, January 2, 2025
Homeசினிமாதிருமணம் குறித்த சர்ச்சை.. முதன் முதலாக அதிரடி பதிலளித்த நெப்போலியன் மகன் தனுஷ்

திருமணம் குறித்த சர்ச்சை.. முதன் முதலாக அதிரடி பதிலளித்த நெப்போலியன் மகன் தனுஷ்


நெப்போலியன் 

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பவர் நடிகர் நெப்போலியன்.


பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார்.
இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

தற்போது தனுஷிற்கு ஜப்பானில் நவம்பர் மாதம் திருமணம் நடத்த உள்ளார்.

திருமண தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வேலைகளை கவனிப்பதற்காக குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன்.

அதிரடி பதிலளித்த தனுஷ்

இந்த திருமணம் குறித்து அறிவித்த முதல் நாளில் இருந்தே பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெப்போலியன் மகன் தனுஷ் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

திருமணம் குறித்த சர்ச்சை.. முதன் முதலாக அதிரடி பதிலளித்த நெப்போலியன் மகன் தனுஷ் | Napoleon Son Dhanush Replied Haters

அதில், “அனைவருக்கும் வணக்கம் இன்ஸ்டா பக்கத்தில் என் திருமணத்திற்காக பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர், அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

ஒரு சிலர் என் திருமணம் குறித்து நெகட்டிவ்வாக பேசியுள்ளனர். அது போன்ற பேச்சுகள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை அதற்கு மாறாக அவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கிறது. மற்றவர்கள் கூறுவதை கேட்டு உடைந்து போகாதீர்கள்” என்று கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments