இனியா
மலையாளத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சைரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் இனியா.
அப்படத்தை தொடர்ந்து டைம், த்ரில், தலாமர்மரங்கல் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்தார். தமிழில் இவரது முதல் படம் என்றால் பாடகசாலை, இப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் பெடத்தில் நடித்தார்.
பின் ரசிகர்கள் அனைவரும் கவனிக்கும் வகையில் அமைந்த படம் வாகை சூடவா. இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் செம ஸ்கோர் செய்தார். ஆனால் அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் கூறவேண்டும்.
லிப்லாக் காட்சி
நடிகை இனியா இப்போது Sweety Naughty Crazy பட விழாவில் முத்தக் காட்சி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், படத்தில் நான் லிப்லாக் காட்சியில் நடித்திருக்கிறேன்.
அதற்கு இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தான் காரணம், ஏனெனில் அவர் ஒரு பெண், அவருடன் பணியாற்றியது சந்தோஷம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பெண்ணாக இருந்ததால் தான் முத்தக் காட்சியில் நடித்தேன்.
அதுமட்டுமின்றி சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.