தளபதி விஜய்
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் தளபதி விஜய் இருவரும் முதல் முறையாக துப்பாக்கி படத்திற்காக இணைந்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் கத்தி படத்திற்காக இணைந்தார்கள்.
விவசாயம் குறித்து பேசிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் இப்படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சதீஸ் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நீல் நிதின் முகேஷ் என்பவர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிட் செய்யப்பட்ட காட்சி
இந்த நிலையில், கத்தி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இப்படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.
இதில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த வீடியோ..
கத்தி படத்தோட Deleted scene 😳💔#தமிழகவெற்றிக்கழகம் #TVK #GOAT #TheGreatestOfAllTime #ThalapathyVijay pic.twitter.com/eugJEImXpv
— தளபதி ரிஷி ツ (@ThalapathiRISHI) June 19, 2024