நடிகை ரெஜினா கசன்ட்ரா
நடிகை ரெஜினா கசன்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ரெஜினா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பொதுவாக நட்சத்திரங்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்கை குறித்து பொது இடங்களில் பேசுவதை விரும்பமாட்டார்கள். ஆனால், நடிகை ரெஜினா தைரியமாக அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேசி வருவார்.
ரகசியத்தை உடைத்த ரெஜினா
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவரிடம் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை செய்து பெற்றோரிடம் மாட்டி கொண்டுள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிரித்து கொண்டே “ஆம், ஒரு முறை பக்கத்து வீட்டை எட்டி பார்த்து என் அம்மாவிடம் வசமாக மாட்டி கொண்டேன். அதற்காக பெரும் அளவில் திட்டும் வாங்கினேன்” என்று கூறியுள்ளார்.