வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்
பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட இந்த குரூப் போட்டோவில் இருக்கும் அந்த உச்ச நட்சத்திரம் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் தான். ஆம், நடிகர் அஜித்தின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், விடாமுயர்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் சென்றுள்ளார்.
வருகிற தீபாவளி பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.