வேட்டையன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.
ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
அதே போல் ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ள இயக்குனர் TJ ஞானவேல், தன்னுடைய இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரை எப்படி காட்டப்போகிறார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்டையன் படம் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் ரூ. 72 கோடி வசூல் செய்த வேட்டையன் தமிழ் நாட்டில் முதல் நாள் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.