Thursday, December 26, 2024
Homeசினிமாகங்குவா படத்தில் AI.. சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம்

கங்குவா படத்தில் AI.. சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம்


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் அதே தேதி என்பதால் கங்குவா தள்ளிவைக்கப்பட்டது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருப்பதால் சோலோ ரிலீஸ் முக்கியம் என தயாரிப்பாளர் அப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தார்.

AI

சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த GOAT படத்தில் இளம் வயது விஜய்யை AI தொழில்நுட்பம் மூலமாக கொண்டுவந்திருந்தனர்.


அதே போல தற்போது சூர்யாவின் கங்குவாவில் AI பயன்படுத்த இருக்கின்றனர்.

தமிழில் சூர்யா டப்பிங் பேசி இருக்கிறார்.

அதே போல மற்ற மொழிகளிலும் சூர்யா குரலையே பயன்படுத்த இருக்கிறார்களாம். AI மூலமாக சூர்யா குரலை மற்ற மொழிகளுக்கு மாற்ற இருக்கின்றனர்.

இந்த தகவலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறி இருக்கிறார்.
 

கங்குவா படத்தில் AI.. சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் | Kanguva Surya Voice In All Languages Using Ai

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments