பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ் 8ல் இன்று 9வது நாள், அதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி ரூ. 8700 சம்பாதித்து இருந்தது.
ஆண்களை திட்டிய தர்ஷா குப்தா
இதனால் ரூ. 8700-குள் தான் அவர்கள் தங்களுடைய மளிகை பொருட்களை வாங்க வேண்டும். ஆனால், ரூ. 12000க்கு மளிகை பொருட்கள் வாங்கிய காரணத்தினால், மொத்தமாக அனைத்து மளிகை பொருட்களும் ரத்து செய்யப்பட்டு, பிக் பாஸ் என்ன தருகிறாரோ, அதை வைத்து மட்டுமே இந்த வாரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என கூறப்பட்டுவிட்டது.
ஆண்கள் செய்த இந்த தவறால், பெண்கள் அணியில் இருந்த ஆண்கள் அணிக்கு வந்த தர்ஷா கடும் கோபத்தில் ஆண்கள் அனைவரையும் திட்டித்தீர்த்துவிட்டார்.
ஆண்கள் அணி செய்துள்ள இந்த மிகப்பெரிய தவறை பார்த்து, பெண்கள் அணியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடட்டத்தில் உள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..