சங்கீதா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல நடிகைகளை இப்போதும் மக்கள் மறக்காமல் உள்ளார்கள்.
அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா, இவர் கேரளாவை சேர்ந்தவர். 5 வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பின் தமிழ் பக்கம் வந்து முதன்முதலாக நாயகியாக எல்லாமே என் ராசா தான் என்ற படத்தில் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
பின் சில வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஒரு கட்டத்தில் 2000ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் சங்கீதா நடித்த பூவே உனக்காக திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்திருக்கிறார்.
நடிகையின் பேட்டி
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் இருந்து காணாமல் போனது ஏன் என பேசியுள்ளார். அதில் அவர், கிளாமராக நடிக்கணும் என்ற கண்டிஷனுக்காகவே நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை.
குழந்தை குடும்பம் என்று ஆனதால் தான் என்னால் சினிமாவில் தொடர முடியவில்லை, அவர்களை பார்த்துக் கொள்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருந்தது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் நடித்தேன், தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.