சூர்யா
நடிகர் சூர்யா-சிறுத்தை சிவா முதன்முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள திரைப்படம் கங்குவா.
பெரிய பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகி 30க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் இப்படத்தை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து நவம்பர் மாதம் பட ரிலீஸ் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா 45
இந்த நிலையில் தான் நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்க இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி என்ற அறிவிப்பு வந்தது.
அப்படத்தை ட்ரீட் வாரியர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் படத்திற்கு கருப்பு என படக்குழு பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் சூர்யாவின் 45வது பட நாயகியாக பிடி சார், சிவப்பு மஞ்சள் பச்சை பட புகழ் காஷ்மிராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.