பிக் பாஸ் 8
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் ரவீந்தர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று வீட்டிலிருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் 11வது நாளான இன்று முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இணைந்து போட்டியிடும்படி டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
நாமினேஷன் ஃபிரீ பாஸ்
மூன்று கட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறார்களோ, அந்த அணியில் உள்ள ஒருவருக்கு நாமினேஷலின் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு, அதாவது நாமினேஷன் ஃபிரீ பாஸ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.