வடசென்னை
தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணிகளில் ஒன்று தனுஷ் – வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தில் துவங்கிய இவர்களுடைய பயணம் அசுரன் வரை வெற்றியை மட்டுமே கண்டுள்ளது.
இதில் இவர்கள் இருவரும் இணைந்த மூன்றாவது திரைப்படம் வடசென்னை. தனுஷ் தயாரித்து நடித்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இன்று வரை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை எங்கும் பார்த்தாலும், ரசிகர்களும் சரி, பத்திரிகையாளர்களும் சரி வடசென்னை 2 எப்போ என்று தான்.
அந்த அளவிற்கு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி என பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், வடசென்னை திரைப்படம் வெளிவந்து 6 வருடங்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், 6 வருடங்களை கடந்துள்ள வடசென்னை படம் உலகளவில் செய்த வசூல் ரூ. 50 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது.