GOAT
விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள GOAT திரைப்படத்திலிருந்து அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.
நாளை விஜய்யின் பிறந்தநாள் என்பதால் இன்று அதற்கான அப்டேட் வெளிவரும் என படக்குழு கூறியிருந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, GOAT படத்தின் அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது பாடல்
அதன்படி, ஏற்கனவே GOAT திரைப்படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான விசில் போடு எனும் பாடல் வெளிவந்த வைரலானது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்ன சின்ன கண்கள் எனும் தலைப்புடன் வெளிவரவிருக்கும் இப்பாடலை தளபதி விஜய் அவர்கள் தான் பாடியுள்ளாராம். இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Oru chinna treat ♥️#TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM 🫶🏻
Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay SirA @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh
@agsentertainment#GOAT @thisisysr… pic.twitter.com/pxOjLxoY46
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2024