சினேகன்
தமிழ் சின்னத்திரையில் முதன்முறையாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் சினேகன்.
இந்நிகழ்ச்சியில் அவர் வந்த பிறகே தமிழ் சினிமாவில் வந்த சில அருமையான பாடல்களை எழுதியவர் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன், படங்களில் பாடல்கள் எழுதுவது, கமல்ஹாசனின் கட்சியின் இணைந்து பணியாற்றுவது என பிஸியாக இருந்தார்.
அதோடு சின்னத்திரை நடிகை கனிகாவையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சந்தோஷ நிகழ்வு
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக நடந்துள்ளது.
அந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.