Tuesday, October 22, 2024
Homeசினிமாதிருப்பி அடிப்பேன்.. பிக் பாஸ் அர்னவ் எலிமினேஷனுக்கு பின் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட வீடியோ

திருப்பி அடிப்பேன்.. பிக் பாஸ் அர்னவ் எலிமினேஷனுக்கு பின் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட வீடியோ


விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்தவர் அர்னவ். அவர் சன் டிவி நடிகை திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து, அவரை கர்ப்பமாக்கிவிட்டு அதன் பின் வேறொரு நடிகை உடன் சென்றுவிட்டார்.

கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதரை அவர் தாக்கி காயப்படுத்தினாராம். இதைபற்றி திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகார் கொடுத்து, அர்னவ் கைதாகி சிறைக்கு சென்று அதன் பின் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பி அடிப்பேன்

பிக் பாஸ் 8ம் சீசனில் அர்னவ் உடன் இருந்த மற்றொரு போட்டியாளரான அன்ஷிதா தான் அவரது புது காதலி என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. எதோ பிக் பாஸில் வந்து சந்தித்து சர்ப்ரைஸ் ஆனது போல ஆரம்பத்தில் பேசிக்கொண்டார்கள்.


நேற்று அர்னவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அன்ஷிதா அழுகையை அடக்க முடியாமல் கதறி கதறி அழுதார்.

இந்நிலையில் தற்போது அர்னவ் முன்னாள் மனைவி திவ்யா ஸ்ரீதர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

“நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்லை. திரும்பி விழும்” என அவர் கோபமாக பேசி இருக்கிறார். அர்னவ்வை தான் அவர் இப்படி எச்சரித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.   



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments