பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குடும்ப பாங்கான தொடர்.
சமூகத்தில் பல பெண்கள் சந்திக்கும் விஷயங்களை இந்த தொடர் காட்டி வந்தது. பாக்கியாவை கோபி ஏமாற்றிய கதைக்களம் வந்த பிறகு கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாகவே மக்கள் நினைக்கிறார்கள்.
அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள், வழக்கம் போல் குடும்பத்தை ஏமாற்றி பாக்கியாவை வெறுப்பேற்ற நாடகம் ஆடும் கோபி என கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
இப்போது கூட பாக்கியாவை கஷ்டப்பட வைக்க வேண்டும் என தனது அம்மாவை என்னென்னவோ கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அதிரடி புரொமோ
ராதிகாவின் கர்ப்பம் கலைய ஈஸ்வரி தான் காரணம் என கோபி முதற்கொண்டு அனைவரும் கூறுகின்றனர்.
வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா மற்றும் அவரது அம்மா 3 பேரும் ஈஸ்வரியை எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே இருக்கிறீர்கள், வெளியே செல்லுங்கள் என அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்கள்.
கோபியும் தனது அம்மாவை தவறாக பேசி வீட்டைவிட்டு வெளியே செல்ல கூறுகிறார். கையில் பெட்டியுடன் நிற்கும் தனது அத்தையை கண்டு பதறியபடி ஓடி வருகிறார் பாக்கியா.
இந்த புரொமோ தான் இப்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.