பிளாக்
திரில்லர் கதைக்களம் கொண்ட படங்களை காணவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். ராட்சசன், டைரி, ஊமை விழிகள், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல திரில்லர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் இந்த மாதம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது பிளாக்.
ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தார் இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கியிருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 10.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.