Sunday, January 5, 2025
Homeசினிமாஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி?- ஓபனாக கூறிய பாலிவுட் நடிகை வித்யா பாலன்

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி?- ஓபனாக கூறிய பாலிவுட் நடிகை வித்யா பாலன்


வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன், பாலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் அமைத்து அதில் பயணிக்கும் ஒரு பிரபலம்.

சும்மா காதல் காட்சி, பாடலுக்கு நடனம், 2, 3 ரொமான்ஸ் சீன் நடித்துவிட்டு செல்லும் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தனது நடிப்பிற்கு இடம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

எல்லா பாலிவுட் நடிகைகளும் தமிழ் தெரியாது என்பார்கள், ஆனால் இவர் பேசும் தமிழை கேட்கவே ஒரு கூட்டம் உள்ளது என்று கூறலாம். 

டயட்

குண்டாக காணப்பட்ட நடிகை வித்யா பாலன் திடீரென தனது உடல் எடையை குறைத்துள்ளார், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல் குறைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஓரு பேட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் (அமுரா ஹெல்த்) என்ற ஊட்டச்சத்து நிபுணர் குழுவை சந்தித்தேன்.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி?- ஓபனாக கூறிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் | Vidya Balan How To Lose Weight Without Workout

அவர்கள் இது வீக்கம்தான், உண்மையான உடல் பருமன் அல்ல என்றனர். வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறை எனக்கு வழங்கப்பட்டது, இந்த உணவுமுறை பலன் அளித்தது. எனக்கு பொருந்தாத உணவுப் பொருட்களை அவர்கள் நீக்கினர்.

நான் சைவ உணவு உண்பவள், எனக்குப் பசலைக்கீரை மற்றும் பூசணிக்காய் பொருந்தாது என்று எனக்குத் தெரியாது.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி?- ஓபனாக கூறிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் | Vidya Balan How To Lose Weight Without Workout

எல்லா காய்கறிகளும் நமக்கு நல்லது என்று நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. அமுரா குழு, வித்யா பாலனை உடற்பயிற்சி செய்வதை நிறுத்த கூறியுள்ளனர்.

அதோடு உணவு முறை மாற்றத்தால் வித்யா பாலன் எடை குறைத்துள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments