நடிகை டாப்சி
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கியதாக இணையத்தில் தகவல் பரவியது.
அதிரடி பேச்சு
அதற்கு நடிகை டாப்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
“Dunki மற்றும் Judwaa 2 போன்ற படங்களில் பணத்திற்காக நடித்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மைக்கு நேர்மாறானது. அந்த படக்குழு நான் அதிக சமபலம் பெறவில்லை” என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் பேசிய அவர் “இப்போதெல்லாம் தன்கண்கள் படங்களில் ஹீரோயின் யார் என்பதை ஹீரோக்கள் தான் முடிவு செய்கிறார்கள். இது நமக்கு தெரிந்த விஷயம் தான். அதில் சிலர் டிரெண்டிங்கில் இருக்கும் ஒருவரையும் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒருவரையும் நடிக்க வைக்க நினைப்பார்கள். சிலர், தங்களை விட சிறிய நடிகைகளை நடிக்க வைக்க விரும்புவார்கள்” என கூறியுள்ளார்.