சூர்யா
நடிகர் சூர்யா கோலிவுட்டில் படு பிஸியான ஹீரோக்களில் ஒருவர். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படம் வரும் 14 – ம் தேதி வெளியாக உள்ளது.
இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் ‘ஜெய் பீம்’ படம் குறித்து சூர்யா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்
அதில், ” சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு வெளியே வரும் போது அங்கு ஒரு முதியவர் ஜெய் பீம் படத்திற்கான டிக்கெட் குறித்து விசாரித்து கொண்டிருந்தார்.
நான் அவரிடம் சென்று ஜெய் பீம் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. OTT பக்கத்தில் தான் வெளியாகியுள்ளது என்று கூறினேன்.
ஆனால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் ஜெய் பீம் படத்தை OTT – ல் வெளியிட்டத்தை தவறு என்று உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.