Thursday, November 14, 2024
Homeசினிமாகங்குவா தீபாவளி அன்று வெளிவராதது நன்மை.. தயாரிப்பாளர் கூறிய மாஸ்டர் பிளான்

கங்குவா தீபாவளி அன்று வெளிவராதது நன்மை.. தயாரிப்பாளர் கூறிய மாஸ்டர் பிளான்


கங்குவா

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14 – ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை பிரம்மாண்டமாக pan இந்தியா படமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பல ஆயிரம் தியேட்டர்களில் உலகம் முழுக்க கங்குவா ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகளை தீவிரமாக படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சென்னை மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கங்குவா திரைப்படம் முன்னதாக அக்டோபர் 10 – ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது ஆனால் அப்போது ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளிவர இருந்ததால் கங்குவா ரிலீஸ் தள்ளி போடப்பட்டது.

அதிர்ச்சி தகவல் 

இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதில் நன்மை தான் ஏற்பட்டுள்ளது.

கங்குவா தீபாவளி அன்று வெளிவராதது நன்மை.. தயாரிப்பாளர் கூறிய மாஸ்டர் பிளான் | Kanguva Not Released Before Was Usefull

தீபாவளி அன்று இந்த படம் வெளிவந்திருந்தால் வெறும் 4000 முதல் 5000 ஆயிரம் ஸ்கிரீன்கள் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால், தற்போது சோலோவாக ரிலீசாகவுள்ளதால் சர்வதேச அளவில் 11,500 ஸ்கிரீன்களில் படம் ரிலீசாக உள்ளது” என்று அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments