Sunday, March 16, 2025
Homeசினிமா150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..


தனுஷ்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக குபேரா வெளிவரவுள்ளது.

இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகராகவும் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனுஷ் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

ராயன் படத்தை முடித்தகையோடு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி கொண்டு தனுஷ், அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நயன்தாரா – தனுஷ் இடையே ஏற்பட்டுள்ள மோதல், தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சொத்து மதிப்பு

நடிகர் தனுஷிற்கு போயஸ் கார்டனில் வீடு இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 150 கோடி இருக்குமாம்.

150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. | Top Actor And Director Dhanush Net Worth



மேலும் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி Audi A8, ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய கார்களை வைத்துள்ளாராம்.

தனுஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 230 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments