Sunday, March 16, 2025
Homeசினிமாகங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு

கங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு


கங்குவா 

கடந்த 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களை படத்தின் மீது வைத்தனர்.

இன்னும் சிலர், படத்தை கலாய்த்து வந்தனர். படத்தின் சவுண்ட் இரைச்சலாக இருக்கிறது, கத்திகொண்டே இருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மையானவர்களின் விமர்சனமாக இருந்தது.

அதற்காக தயாரிப்பாளர் ஞானவேல், திரையரங்கில் இனி திரையிடப்படும் காட்சிகளில் இரண்டு புள்ளிகள் சவுண்ட் குறைக்கப்படும் என கூறியிருந்தார். மேலும் எமோஷனல் காட்சிகளும் கனெக்ட் ஆகவில்லை என்றும் விமர்சனங்களை வெளிவந்தது.

பதிலடி கொடுத்த ஜோதிகா

இந்த நிலையில், சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு | Jyothika Reply For Kanguva Criticism

இதில் “கங்குவா படத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்படுகிறது. 3 மணி நேர படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே சரியில்லை. கங்குவா படத்தின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது, அதிர்ச்சியளிக்கிறது. கங்குவா படத்திலுள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?” என பதிவு செய்துள்ளார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments