Thursday, December 26, 2024
Homeசினிமாஉன்னோட யாமினியை மட்டும் கண்டுபிடிச்சிட்டா.. வைரலாகும் செல்வராகவன் பதிவு

உன்னோட யாமினியை மட்டும் கண்டுபிடிச்சிட்டா.. வைரலாகும் செல்வராகவன் பதிவு


செல்வராகவன்

காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.

அதன் பிறகு, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

இதில், மயக்கம் என்ன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. குறிப்பாக, அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா லங்கெல்லா யாமினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு பின் இளைஞர்கள் பலர் தனக்கு யாமினி போன்ற பெண் வாழ்க்கைத்துணையாக வர வேண்டும் என்று கேட்க தொடங்கி விட்டனர்.

செல்வராகவன் பதிவு 

மயக்கம் என்ன படம் வெளியாகி நேற்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில், மயக்கம் என்ன படத்தின் இயக்குனர் செல்வராகவன் அவரது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

உன்னோட யாமினியை மட்டும் கண்டுபிடிச்சிட்டா.. வைரலாகும் செல்வராகவன் பதிவு | Selvaraghavan Comment Goes Viral

அதில், ” வாழ்க்கையில் உன்னோட யாமினியை மட்டும் நீ கண்டுபிடித்துவிட்டால், இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டசாலி” என்று கமெண்ட் செய்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments