அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் துணிவு படத்தின் வெற்றிக்கு பின் கமிட்டாகி நடித்து வந்த படம் விடாமுயற்சி.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
ஆனால், அதன்பின் அஜித் கமிட் செய்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி 2025ஆம் ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும் குட் பேட் அக்லி படத்தில் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இறுதி கட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறது.
வைரல் வீடியோ
இந்நிலையில், படத்தில் மட்டுமின்றி அஜித்துக்கு மிகவும் பிடித்த ரேசிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித் அடுத்தாண்டு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார். அண்மையில், தனது அணியின் பந்தய வீரர்கள் யார் என்பது குறித்து அறிவித்திருந்தார்.
15 ஆண்டுகளுக்குப் பின் ரேஸிங் களத்தில் இறங்கியுள்ள அஜித் ரேசிங்கில் பயன்படுத்தப்படும் உடைகள், மற்றும் அவரது நிறுவன லோகோ பதித்த காரை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ரசிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Exclusive
![]()
Thala with his
Racing Car
#GoodBadUgly #VidaaMuyarchi#AjithKumar pic.twitter.com/8hKtjeAuZz
— AJITH GIRL FANS CLUB
(@AjithGirlsFC) November 27, 2024