சிறகடிக்க ஆசை
அண்ணாமலை முத்து-மீனாவிற்காக ஒரு ரூம் கட்டித்தருவாரா என ரசிகர்கள் ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கதை இல்லாதது போல அப்பப்போ மின்னல் வந்து செல்வது போல் இந்த ரூம் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் இப்படியே இழுத்துக்கொண்டே போனால் கண்டிப்பாக ரசிகர்கள் கோபம் அடைந்துவிடுவார்கள்.
தவறு செய்யும் மனோஜ்-ரோஹினிக்கு ப்ளஸ் காட்சிகளும், மீனா-முத்துவிற்கு அவ்வளவாக வெயிட்டான காட்சிகள் இல்லை என்பதே ரசிகர்களுக்கு ஏற்கெனவே ஒரு கோபமாக உள்ளது.
இனி வரும் கதைக்களம் எப்படி இருக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் கடைசியில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வந்துள்ளது. அதில் சகுனி வேலை செய்ய அண்ணாமலை வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா அதை சரியாக செய்துவிட்டார்.
அவருக்கு முன்பாகவே முத்து-மனோஜ் இடையே இருந்த காரசார பேச்சு வார்த்தை அப்படியே அடிதடியில் சென்றுவிட்டது. இதனை ஸ்ருதியின் அம்மா பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்.
இதோ நாளைய எபிசோட் புரொமோ,