கமல்ஹாசன் நடித்து உள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பிரெஸ் மீட்டில் பேசும்போது கமல்ஹாசன் ஷாருக் கான் பற்ற ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
காசு வாங்காமல் நடித்த ஷாருக்
நாங்கள் ஒன்றாக பணியாற்றியபோது சாதாரணமாக தான் இருந்தது. அவரை சூப்பர்ஸ்டார் ஆக நான் பார்க்கவில்லை, என்னை ஒரு பெரிய இயக்குனராக அவர் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள் அவ்வளவு தான்.”
“சூப்பர்ஸ்டார் ஆக நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லை. மக்கள் அந்த டைட்டில் கொடுக்கிறார்கள்., அதை ஏற்றுக்கொள்கிறோம்.”
“ஹே ராம் படத்தை அவர் காசு வாங்காமல் எனக்கு நடித்து கொடுத்தார். அதை விட என்ன வேண்டும்?.”
“ஒரு சூப்பர்ஸ்டார் அப்படி செய்வாரா. சினிமாவுக்கு நிஜமான fan ஆக இருப்பவர், ஒரு சிறந்த நடிகராக இருப்பவர். அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.”
இவ்வாறு கமல் பேசி இருக்கிறார்.