Thursday, December 26, 2024
Homeசினிமாவாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகள்.. ரூ.15 லட்சம் கொடுத்து கார்த்தி வைத்த கோரிக்கை

வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகள்.. ரூ.15 லட்சம் கொடுத்து கார்த்தி வைத்த கோரிக்கை


சமீபத்தில் தமிழகத்திற்கு பெரிய அளவு பாதிப்பை ஃபெஞ்சல் புயல் ஏற்ப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கார்த்தி 15 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.

முதலமைச்சர் நிவராண நிதிக்கு அவர் நிதி வழங்கி இருக்கிறார். அது பற்றி அவர் கூறி இருப்பதாவது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளதால் இப்புயலில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைவிட கள நிலவரம் மிக மிக மோசமானதாக உள்ளது.

விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. விவசாயத்திற்கு தேவைப்படும் மொத்த அமைப்பும் ஒரே இரவில் சீர்குழைந்துள்ளது.

ஏற்கனவே தங்கள் விளைப் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தங்கள் உழைப்பை கொடுத்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மொத்தமாக இப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மத்திய மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைப் பொருட்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளுக்கு உரிய மதிப்பீட்டை ஆராய்ந்து இழப்பீட்டை வெகு விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையான விவசாயத்தையும், அதற்கான பிற பணிகளையும் மீண்டும் தொடங்க பெருந்துணையாக இருக்கும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் இழப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முதல்படியாக என் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15,00,000/- (பதினைந்து இலட்சம்) நிவாரணத் தொகையாக அளிக்கிறேன். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments