Thursday, December 12, 2024
Homeசினிமாபா.ரஞ்சித் படத்தில் இணையும் முன்னணி நடிகர்.. வெறித்தனமான அப்டேட் இதோ

பா.ரஞ்சித் படத்தில் இணையும் முன்னணி நடிகர்.. வெறித்தனமான அப்டேட் இதோ


பா.ரஞ்சித்

வெங்கட் பிரபுவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி, பின் ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பா.இரஞ்சித். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார்.

அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்தது. இதனால் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்தார்.

பா.ரஞ்சித் படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தரமாக பேசி இருப்பார். அந்த வகையில், கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார்.

தற்போது, அடுத்து பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

வெறித்தனமான அப்டேட்

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பா.ரஞ்சித் படத்தில் இணையும் முன்னணி நடிகர்.. வெறித்தனமான அப்டேட் இதோ | Fahadh Going To Act In Pa Ranjith Film

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments