பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 8. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓட யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நிறைய நடக்கிறது.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க, வரும் வாரங்களிலும் டபுள் எவிக்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
அர்னவ்
இந்த பிக்பாஸில் 2வது வாரமே வெளியேறியவர் அர்னவ். இவர் பிக்பாஸ் வருவதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.
இவர் சீரியலை தாண்டி சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறியவர் தற்போது புதிய தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறாராம்.