கல்கி 2898 AD
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கல்கி 2898 AD. பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகளவில் வெளிவந்துள்ளது.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் சர்ப்ரைஸாக பல நட்சத்திரங்கள் இப்படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள்
இந்த நிலையில் கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டுமே ரூ. 110 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம் கல்கி.
ஆனால், படக்குழு முதல் நாள் மொத்த வசூல் ரூ. 200 கோடி வரவேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் முடிவில் இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு இருக்க போகிறது என்று.