ஷபானா
தமிழ் சின்னத்திரையில் 1000 எபிசோடுகளுக்கு மேல் செல்லும் தொடர் எல்லாமே சாதனை படைத்த சீரியல்கள் தான்.
சன் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி இருக்கிறது. ஜீ தமிழிலும் ஒரு தொடர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது.
அப்படி என்ன தொடர் என்று உங்களுக்கே தெரியும், செம்பருத்தி தொடர் தான்.
கார்த்திக்-ஷபானா ஜோடியாக நடிக்க இவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகியது.
ஷபானா
கொஞ்சம் தமிழில் பேசினாலும் இந்த தொடரில் அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா.
செம்பருத்தி தொடர் முடிவுக்கு வர அடுத்து சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் கமிட்டாகி நடித்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பேசிய அவரிடம் அடுத்த தொடர் என்ன என ரசிகர் கேட்க அதற்கு அவர், விரைவில் என பதிவிட்டுள்ளார்.