அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் அமரன்.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
அமரன் படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் நடிப்பது, சுதா கொங்கரா பட பூஜை என அடுத்தடுத்து பிஸியாகிவிட்டார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு இப்போது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாய் பல்லவி அமரன் படத்திற்கு விருது எல்லாம் பெற்றார், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பட ஷேர்
ரூ. 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்து சிவகார்த்திகேயன் அமரன் பட ஷேர் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அமரன் படத்தின் தமிழ்நாட்டு ஷேர் மட்டுமே ரூ. 70 கோடிக்கு மேல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.