பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முதல் சீசன் முடிவுக்கு வர இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
போன சீசன் அண்ணன்-தம்பிகள் என்றால் இந்த சீசன் அப்பா-மகன்கள் பற்றிய கதை. ஒவ்வொரு மகனுக்கும் விதவிதமான கதைக்களத்துடன் திருமணம் நடந்துள்ளது.
அதில் பெற்றோர்கள் சம்மதத்துடன் பாண்டியன் குடும்பத்தின் முதல் மகனுக்கு மட்டுமே நடந்துள்ளது, அண்மையில் தான் திருமண எபிசோடும் முடிந்தது.
இன்றைய எபிசோட்
சரவணனை திருமணம் செய்துகொண்டவர் தங்கமயில்.
இவர் வீட்டிற்கு வந்ததில் மாமனாரின் மனதை வெல்ல வேண்டும் என நிறைய விஷயங்கள் செய்கிறார், ஆனால் அது வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சனையாக முடிகிறது.
செந்தில்-மீனா கடற்கரை சென்றதை மயில் மாமனாரிடம் கூறியதால் பெரிய பிரச்சனை வெடிக்கிறது. இதனால் கோபமாக அறைக்கு சென்ற மீனாவிடம் சென்ற தங்கமயிலை வறுத்து எடுக்கிறார்.
செமயாக தங்கமயிலை மீனா திட்டிவிடுகிறார், இதனை அறிந்த ரசிகர்களும் தீயான எபிசோட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.