Saturday, March 15, 2025
Homeசினிமாஅருண் பிரசாத் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த தீபக் மனைவி......

அருண் பிரசாத் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த தீபக் மனைவி… திணறிய போட்டியாளர்


பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷனாக நடந்து வந்தது.

ஆனால் கடந்த வாரம் ரஞ்சித் மட்டும் தான் வெளியேறி இருந்தார்.


அடுத்த டாஸ்க்


பிக்பாஸ் 8 டாஸ்க்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் Freeze Task வந்துள்ளது. முதல் ஆளாக தீபக்கின் மனைவி மற்றும் மகன் உள்ளே வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்.

பின் பிக்பாஸ் தீபக்கின் மனைவியிடம் எந்த போட்டியாளரின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினார்.

அதற்கு அவர், அருண் பிரசாத் என்று கூறியவர், இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபக்குடன் சண்டையிட்டு வெளியே சென்று சத்யாவிடம் சொன்ன வார்த்தை என்னை காயப்படுத்தியது.

அருண் பிரசாத் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த தீபக் மனைவி... திணறிய போட்டியாளர் | Deepak Wife Slams Arun Prasath In Bigg Boss 8

அருண், தீபக்கிடம் சண்டை போட்டபின் சத்யாவிடம், நான் இப்போது டிரெண்டிங்கில் இருக்க ஹீரோ, என்கிட்டயே இப்படி நடந்துக்கிறாரு. அப்போ அவர் டிரெண்டிங்ல இருக்கும் போது அவருடைய அசிஸ்டண்ட் கிட்ட எப்படி நடத்திருப்பார் என்று பேசி இருந்தார்.

அது என்னை காயப்படுத்தியது, தீபக் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது, அவர் யாரையும் அப்படி தவறாக நடத்தி நீங்கள் பார்த்ததில்லை, நீங்கள் யூகித்து சொன்ன ஒரு விஷயம் தான் அது என கூற கொஞ்சம் அருண் பிரசாத் திணறினார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments