சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது எஸ் கே 23வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 25வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வீட்டில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
பொங்கலோ பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
#HappyPongal #HappySankranti
pic.twitter.com/B5VsSNsPoZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2025