Friday, March 14, 2025
Homeசினிமாமுன்னணி நடிகர் சைப் அலி கானுக்கு கத்திக்குத்து.. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம், நடந்தது என்ன...

முன்னணி நடிகர் சைப் அலி கானுக்கு கத்திக்குத்து.. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம், நடந்தது என்ன ?


நடிகர் சைப் அலி கான் 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைப் அலி கான். இவர் நடிப்பில் கடைசியாக தேவரா திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சைப் அலி கான் வீட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

 நடந்தது என்ன ?  

அதாவது, மும்பையில் உள்ள தனது வீட்டில், இரவு சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் விழித்ததையடுத்து, சைஃப் அலிகானை கொள்ளையன் 2,3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகர் சைப் அலி கானுக்கு கத்திக்குத்து.. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம், நடந்தது என்ன ? | Actor Saif Ali Khan Robbery

இது தொடர்பாக, காவல்துறையினர் வெளியிட்ட முதற்கட்ட தகவலின்படி, சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments