நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை முடித்தபின் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து First லுக் மற்றும் second லுக் போஸ்டர்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விடாமுயற்சி படத்தின் First லுக்
இதை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து First லுக் போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளனர். அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் நாளை மாலை 7.03 மணிக்கு விடாமுயற்சி அப்டேட் என குறிப்பிட்டுள்ளார். இந்த அப்டேட் விடாமுயற்சி படத்தின் First லுக் போஸ்டர் தான் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tomorrow, Sunday 7️⃣:0️⃣3️⃣ PM 🕖
— Lyca Productions (@LycaProductions) June 29, 2024